அப்போஸ்தலர் 10:6தோல் பதனிடுவோன் வீடு
அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்திலே தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.
Acts 10:6
தோல் பதனிடுவோன் வீடு
பேதுரு தங்கியிருந்த இடம் ஒரு தோல் பதனிடுகிறவனான சீமோனுடைய வீடு. தோல் பதனிடும் தொழில் யூத மரபில் தீட்டானதாகக் கருதப்பட்டது. அத்தகைய வீட்டில் பேதுரு தங்கியிருந்தது, அவருடைய மனசு ஏற்கனவே சம்பிரதாய கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தது என்பதைச் சூசகமாகக் காட்டுகிறது.
