அப்போஸ்தலர் 21:10அகபு வந்த நாள்
நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான்.
Acts 21:10
அகபு வந்த நாள்
பல நாட்கள் அங்கே தங்கியிருந்தபோது, யூதேயாவிலிருந்து அகபு என்னும் தீர்க்கதரிசி வந்தார். இவரையே நாம் முன்பு அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:28 இல் பஞ்சத்தை முன்னறிவித்தவராக பார்த்திருக்கிறோம். தேவனுடைய செய்தி எப்போது, யாரிடம் வர வேண்டுமோ அப்போது சரியாக வருகிறது.
