அப்போஸ்தலர் 24:1குற்றம் சாட்ட வந்தவர்கள்
ஐந்துநாளைக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும்கூடப் போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள்.
Acts 24:1
குற்றம் சாட்ட வந்தவர்கள்
பவுல் சிறையில் அடைக்கப்பட்டு ஐந்து நாட்கள் ஆனது. அப்போது பிரதான ஆசாரியன் அனனியா, மூப்பர்கள், தெர்த்துல்லு என்னும் வக்கீல் ஆகியோர் செசரியாவுக்கு பயணம் செய்து வந்தார்கள். இவ்வளவு தூரம் வந்ததே பவுலின்மேல் அவர்களுக்கு இருந்த பகையின் அளவை காட்டுகிறது. ஒரு மனுஷனை அடக்க எத்தனை பேர் கூடி வந்திருக்கிறார்கள் பாருங்கள். இன்றும் நல்லது செய்பவனுக்கு எதிராக பொறாமையுள்ளவர்கள் கூடிவருவது புதிதல்ல.
