அப்போஸ்தலர் 26:15நீர் யார் ஆண்டவரே
அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.
Acts 26:15
நீர் யார் ஆண்டவரே
தரையில் விழுந்த பவுல் ‘ஆண்டவரே, நீர் யார்’ என்று கேட்டார், அதற்கு பதில் வந்தது - ‘நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே’. ஒரு தீவிர எதிரிக்கு தன்னை நேரடியாக வெளிப்படுத்திய இயேசுவின் கிருபை இதில் தெரிகிறது. பவுல் யாருக்கு எதிராக போராடினார் என்பதை இப்போது புரிந்துகொள்கிறார் - உயிரோடிருக்கும் கர்த்தராகிய இயேசுவுக்கே. நம் தவறுகளையும் இயேசு நேரடியாக நமக்கு காட்டி, நம்மை திருத்த விரும்புகிறார்.
