அப்போஸ்தலர் 3:2வாசலில் ஒரு சப்பாணி
அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள்.
Acts 3:2
வாசலில் ஒரு சப்பாணி
பிறவியிலேயே கால் ஊனமுற்ற இந்த மனுஷனுக்கு நடக்கும் அனுபவமே இல்லை. ஒவ்வொரு நாளும் நண்பர்கள் அவரைத் தூக்கி, ஆலயத்தின் அலங்கார வாசலண்டையில் வைத்துச் செல்வார்கள். அது ஆலயத்திற்குள் நுழைவோர் அனைவரும் காணும் இடம், எனவே பிச்சை கேட்பதற்கு அதுவே சிறந்த இடமாக இருந்தது. வருடக்கணக்கில் அதே இடத்தில், அதே நிலையில் அவர் இருந்திருப்பார். இன்று அவருக்கு தேவன் புதிய திறவுகோலை வைத்திருந்தார்.
