அப்போஸ்தலர் 6:1முறுமுறுப்பு எழுந்தது
அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாட விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தர்கள்.
Acts 6:1
முறுமுறுப்பு எழுந்தது
சபை பெருகப் பெருக, ஒரு பிரச்சனை உள்ளே வந்தது. கிரேக்க பாஷை பேசிய யூத விதவைகளுக்கு அன்றாட உணவு பங்கீட்டில் குறை வந்ததாகச் சொல்லி, எபிரெய யூதருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். சபை என்பது மனிதர் கூட்டம் என்பதால், அன்பு நிறைந்திருந்தாலும் இப்படி தேவைகளும் தவறுதல்களும் வரும். இதை மறைக்காமல் வேதம் நேர்மையாய்ச் சொல்கிறது.
