ஆமோஸ் 4:13சேனைகளின் தேவன்
அவர் பர்வதங்களை உருவாக்கினவரும் காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
Amos 4:13
சேனைகளின் தேவன்
மலைகளை உருவாக்கினவரும் காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய மறைந்த நினைவுகளையும் அறிந்தவரும் - இத்தனை வலிமையும் அறிவும் கொண்ட தேவனிடம்தான் இஸ்ரவேல் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவர் என்பது, பகல் இரவு எல்லாமே அவர் கையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இந்த அதிகாரமுள்ள தேவனையே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்று அழைக்கிறார் ஆமோஸ். இப்படிப்பட்ட வல்லமையுள்ள தேவன், ஏழைகளின் அழுகுரலைக் கேட்கும் தேவனாகவும் இருக்கிறார் என்பதே நம் நம்பிக்கை.
