தானியேல் 3:24நாலு பேரை கண்டான்
அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள்.
Daniel 3:24
நாலு பேரை கண்டான்
ராஜா திடீரென அதிர்ந்து எழுந்து, மந்திரிகளிடம் மூன்றுபேரையல்லவா கட்டி போட்டோம் என்று கேட்டார். அவர் கண்ணால் கண்டது அவரையே திடுக்கிடச் செய்தது. ஏதோ எதிர்பாராதது நடந்திருக்கிறது என்பதை அவரது குரலிலேயே உணரமுடிகிறது.
