தானியேல் 6:4குற்றமும் காணப்படவில்லை
அப்பொழுது பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை.
Daniel 6:4
குற்றமும் காணப்படவில்லை
தானியேலின் மேல் பொறாமை கொண்ட பிரதானிகளும் தேசாதிபதிகளும் அவரைக் குற்றப்படுத்த ஏதேனும் காரணம் தேட ஆரம்பித்தார்கள். ஆனால் எத்தனை தேடினாலும் ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை, ஏனெனில் அவர் உண்மையுள்ளவராக இருந்தார். எத்தனை பேர் அவரை பகைத்தார்களோ, அத்தனை பேரும் அவரிடம் நேர்மையைத்தான் கண்டார்கள். ஒரு மனுஷனின் வாழ்க்கை உண்மையானதாக இருக்கும்போது, அவனை எதிர்ப்பவர்களே அவனுடைய நேர்மைக்குச் சாட்சி பகர்வார்கள்.
