உபாகமம் 18:10பிள்ளையை தீக்கடத்தல்
தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும்,
Deuteronomy 18:10
பிள்ளையை தீக்கடத்தல்
கானானிய ஜனங்களிடையே இருந்த மிகக்கொடிய வழக்கங்களை மோசே பட்டியலிடுகிறார் - தன் பிள்ளையையே தீயில் பலியிடுவது, குறிசொல்வது, நாள்பார்ப்பது, அஞ்சனம் பார்ப்பது, சூனியம் செய்வது. இவை இந்நாள் நமக்கு அன்னியமாகத் தோன்றலாம், ஆனால் அன்று அவை பொது வழக்கமாக இருந்தன. கடவுளுக்கு பயப்படுவதற்கு பதிலாக, மனிதனை மனிதன் பலியிடும் அளவு அப்பாவித்தன்மையை இழந்திருந்த சமூகம் அது.
