உபாகமம் 25:4போரடிக்கும் மாடு
போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக.
Deuteronomy 25:4
போரடிக்கும் மாடு
கோதுமையை மிதித்து போரடிக்கும் மாட்டின் வாயைக் கட்டவேண்டாம் என்று மோசே சொல்கிறார். வாய் கட்டப்படாவிட்டால் அது தானே சிறிது தானியம் தின்று உழைப்பிற்குரிய பலனை அனுபவிக்கும். வேலை செய்பவனுக்கு அவன் உழைப்பின் கூலி மறுக்கப்படக்கூடாது என்ற பொது நியாயத்தை ஒரு மாட்டின் மூலமாகவே கற்பிக்கிறார் மோசே. பவுல் இந்த வசனத்தையே எடுத்து பணிவிடையாளர்களுக்கும் இதே நியாயத்தை உபதேசிக்கிறார் 1 கொரிந்தியர் 9:9.
