பிரசங்கி 10:1ஒரு தப்பு, பெரிய நாசம்
செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்.
Ecclesiastes 10:1
ஒரு தப்பு, பெரிய நாசம்
தைலக்காரன் எத்தனை பொருட்செலவு செய்து பரிமள தைலம் தயாரித்தாலும், அதில் ஒரு செத்த ஈ விழுந்தால் போதும், முழுவதும் நாறிப்போய்விடும். சாலொமோன் சொல்கிறார், ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்ற ஒரு மனிதனும் அப்படித்தான் என்று. சிறு மதியீனம் ஒன்று, பெரிய நற்பெயரை அழித்துவிடும். ஆகவே கனத்தை காக்க வேண்டியது, சிறு விஷயங்களில்தான்.
