பிரசங்கி 5:11தின்கிறவர்கள் பெருகுவார்கள்
பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதை காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன?
Ecclesiastes 5:11
தின்கிறவர்கள் பெருகுவார்கள்
செல்வம் பெருகும்போது, அதைச் சார்ந்து வாழ்பவர்களும் பெருகுகிறார்கள் - உறவினர், நண்பர்கள், ஊழியர்கள் என்று எல்லோரும் அதில் பங்கு கேட்பார்கள். பணக்காரனுக்கு அதை கண்களால் பார்க்கிற சந்தோஷமே மிச்சம், மற்றபடி பெரிய பயனேதும் இல்லை என்று சாலொமோன் சொல்கிறார். எவ்வளவு சேர்த்தாலும், அதை அனுபவிக்க முடியாத நிலைமையே பெரும் விநோதம். சேர்ப்பதில் மட்டும் மனதைச் செலவிட்டால், அனுபவிப்பதற்கான நேரமும் மனசும் இல்லாமல் போய்விடும்.
