TamilBible.ai App

For offline reading and AI chat

Get the app
TamilBible.ai

எஸ்தர் 2:3சூசானின் கன்னிமாடம்

அதற்காக ராஜா தம்முடைய ராஜ்யத்தின் நாடுகளிலெல்லாம் விசாரிப்புக்காரரை வைக்கவேண்டும்; இவர்கள் ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி, சூசான் அரமனையிலிருக்கிற கன்னிமாடத்துக்கு அழைத்துவந்து, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாயின் வசத்திலே ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும்.

Esther 2:3

சூசானின் கன்னிமாடம்

ராஜ்யத்தின் எல்லா நாடுகளிலும் விசாரிப்புக்காரர் நியமிக்கப்பட்டு, அழகான பெண்களை சூசான் அரமனைக்கு கூட்டிவரும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. யேகாய் என்ற பிரதானி அவர்களை பராமரிக்கும் பொறுப்பு பெற்றார். இந்த பரந்த, கவனமாக திட்டமிடப்பட்ட ஏற்பாட்டின் நடுவே ஒரு சிறிய யூதப் பெண் இருப்பாள் என்பது யாருக்கும் தெரியாது. பெரிய அரசியல் நடவடிக்கைகளின் நடுவே தேவன் தம் திட்டத்தை மறைத்து வைத்திருக்கிறார்.