யாத்திராகமம் 12:7வாசல் நிலைக்கால்கள்
அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து,
Exodus 12:7
வாசல் நிலைக்கால்கள்
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை வெறுமனே கிண்ணியில் வைத்திருக்கவில்லை - வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும், மேற்சட்டத்திலும் தெளிக்க வேண்டும் என்று கட்டளை. வெளியே தெரியும்படியாக, வெளிப்படையாக அந்த அடையாளம் இருக்க வேண்டும். வீட்டின் வாசல் ஒரு பாதுகாப்பு எல்லையாக மாறும் தருணம் இது. கர்த்தருடைய கிருபை மறைவாக இல்லாமல் வெளிப்படையாக நமக்குள் தெரிய வேண்டும்.
