யாத்திராகமம் 18:21தகுதியுள்ளவரைத் தேர்தல்
ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும்.
Exodus 18:21
தகுதியுள்ளவரைத் தேர்தல்
எத்திரோ சொல்கிறார் - தேவனுக்குப் பயந்தவர்கள், உண்மையுள்ளவர்கள், பொருளாசையை வெறுக்கிறவர்களான திறமையுள்ள மனிதரைத் தேர்ந்துகொள்ளவேண்டும். இவர்களை ஆயிரம், நூறு, ஐம்பது, பத்து பேருக்கு அதிபதிகளாக ஏற்படுத்தவேண்டும். தலமையின் தகுதி வெறும் திறமையல்ல, தேவபயமும் நேர்மையும் சேர்ந்திருக்கவேண்டும். இது இன்றும் எந்த பொறுப்பையும் ஏற்பவருக்கு ஒரு நல்ல வழிகாட்டி.
