யாத்திராகமம் 2:6அழுத குழந்தை, இளகிய மனசு
அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள்.
Exodus 2:6
அழுத குழந்தை, இளகிய மனசு
பெட்டியைத் திறந்தபோது உள்ளே அழும் குழந்தை - எபிரெய இனத்தைச் சேர்ந்தவன் என்பது அவளுக்குத் தெரிந்தது. அரசன் கொல்ல வேண்டும் என்று சொன்ன அதே இனத்துக் குழந்தை. ஆனாலும் அவளுடைய மனசு இரக்கத்தால் நெகிழ்ந்தது; 'இதின்மேல் இரக்கமுற்று' என்று வசனம் சொல்கிறது. அரசனுடைய கட்டளைக்கும் மேலாக, ஒரு பெண்ணின் தாய்மையான இதயம் வேலை செய்தது.
