யாத்திராகமம் 32:1தாமதத்தில் தளர்ந்த மனது
மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக் கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்.
Exodus 32:1
தாமதத்தில் தளர்ந்த மனது
மோசே மலையில் நாற்பது நாட்கள் இருந்தார். ஜனங்களோ காத்திருக்க மனசில்லாமல் ஆரோனிடம் ஓடி வந்தார்கள். ‘எங்களை நடத்திச் செல்லும் தெய்வங்களை உண்டுபண்ணும்' என்று கேட்டார்கள். கண்ணுக்குத் தெரியாத தேவனை நம்பி நிற்பதைவிட, கண்முன் ஒரு உருவத்தை வணங்குவது எளிதாகத் தோன்றியது அவர்களுக்கு. காணாத நாட்களில்தான் நம் விசுவாசம் உண்மையிலே சோதிக்கப்படுகிறது.
