யாத்திராகமம் 34:10புதிய உடன்படிக்கை
அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்.
Exodus 34:10
புதிய உடன்படிக்கை
கர்த்தர் மோசேயுடன் ஒரு உடன்படிக்கை செய்ய ஒப்புக்கொள்கிறார், பூமியில் எந்த ஜாதிக்கும் செய்யாத அதிசயங்களை இஸ்ரவேலருக்கு செய்வேன் என்று வாக்களிக்கிறார். இஸ்ரவேலரின் பாவம் இருந்தும், தேவன் தம் வாக்குத்தத்தத்தை மறுபடியும் புதுப்பிக்கிறார். இது தேவனுடைய கிருபையின் மகத்துவம்.
