யாத்திராகமம் 37:22ஒரே பொன்னின் வேலை
அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பசும்பொன்னினால் ஒரே அடிப்பு வேலையாய்ச் செய்யப்பட்டது.
Exodus 37:22
ஒரே பொன்னின் வேலை
பழங்களும் கிளைகளும் தனித்தனியாக செய்யப்பட்டு பொருத்தப்படவில்லை, ஒரே பசும்பொன் தகட்டிலிருந்து ஒரே அடிப்பு வேலையாகவே செய்யப்பட்டன. இது எத்தனை பெரிய கலைத்திறமை என்று நினைத்துப் பாருங்கள். பிரிந்திருந்த பாகங்கள் அல்ல, ஒரே தொகுதியாக இருந்தமையே இந்த குத்துவிளக்கின் அழகின் ரகசியம். ஒற்றுமையிலேயே அழகும் பலமும் இருக்கிறது.
