எசேக்கியேல் 12:21மூன்றாம் வார்த்தை
பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Ezekiel 12:21
மூன்றாம் வார்த்தை
இந்த அதிகாரத்தில் மூன்றாம் முறையாக கர்த்தருடைய வார்த்தை எசேக்கியேலுக்கு வருகிறது. இப்போது ஒரு பழமொழியை பற்றி பேசப் போகிறார். மக்கள் மத்தியில் புழங்கிய சொலவடையையே கர்த்தர் தூக்கி எடுத்து அதற்குப் பதில் சொல்கிறார். மக்களின் மனசில் இருந்த ஐயப்பாட்டை கர்த்தர் அறிவார், அதை நேரடியாக எதிர்கொள்கிறார்.
