எசேக்கியேல் 15:2திராட்சைக் கட்டையின் கேள்வி
மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைப்பார்க்கிலும் திராட்சச்செடிக்கு மேன்மை என்ன?
Ezekiel 15:2
திராட்சைக் கட்டையின் கேள்வி
கர்த்தர் ஒரு எளிய கேள்வி கேட்கிறார் - திராட்சச்செடிக்கும் மற்ற காட்டு மரங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? மற்ற மரங்களைப் பாருங்கள், அவற்றின் கட்டைகள் வளமானவை, வலிமையானவை. திராட்சச்செடியின் கொம்போ மெலிதாக, வளையக்கூடியதாக இருக்கும். அதன் பெருமை பழத்தில்தான், மரத்தில் அல்ல என்பது இங்கே மறைந்திருக்கும் உண்மை.
