எசேக்கியேல் 16:25வழிமுகனையில் மேடைகள்
நீ சகல வழிமுகனையிலும் உன் உயர்ந்த மேடைகளைக் கட்டி, உன் அழகை அருவருப்பாக்கி, வழிப்போக்கர் யாவருக்கும் உன் கால்களை விரித்து, உன் வேசித்தனங்களைத் திரளாய்ப் பெருகப்பண்ணி,
Ezekiel 16:25
வழிமுகனையில் மேடைகள்
ஒவ்வொரு வழி முடுக்கிலும் விக்கிரக ஆராதனை மேடைகள் இருந்தன. கர்த்தர் கொடுத்த அழகையே இப்போது தகாத வழியில் பயன்படுத்தி, தன்னை மற்ற தேசங்களுக்கும் தேவர்களுக்கும் அர்பணித்தாள். கொடுத்த அன்பை, கொடுத்தவருக்கு விரோதமாகவே பயன்படுத்தும் இந்த முறை எத்தனை வேதனையானது.
