எசேக்கியேல் 16:8உடன்படிக்கை நாள்
நான் உன் அருகே கடந்துபோன போது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய்.
Ezekiel 16:8
உடன்படிக்கை நாள்
பருவகாலம் என்பது திருமணத்திற்கு தயாராகும் காலத்தை குறிக்கிறது. கர்த்தர் தன் வஸ்திரத்தை அவள் மேல் விரித்து மூடினார் என்பது பண்டைய கால திருமண சடங்கை நினைவுபடுத்துகிறது. இது சீனாய் மலையில் இஸ்ரவேலோடு கர்த்தர் செய்த உடன்படிக்கையை குறிக்கிறது. ஒரு எளிய, ஒன்றுமில்லாத ஜனம் இப்போது கர்த்தருடைய சொந்த ஜனமாக, அவருடைய அன்பான பொறுப்பின் கீழ் மாறியது.
