எசேக்கியேல் 23:41அலங்காரமான மஞ்சம்
சிறந்த மஞ்சத்தின்மேல் உட்கார்ந்துகொண்டாய்; அதின் முன்னே ஒரு பீடம் ஆயத்தம்பண்ணப்பட்டிருந்தது; என் தூபவர்க்கத்தையும் என் எண்ணெயையும் அதின்மேல் வைத்தாய்.
Ezekiel 23:41
அலங்காரமான மஞ்சம்
தன் தேவனுக்கே செலுத்த வேண்டிய தூபவர்க்கத்தையும் எண்ணெயையும் அந்நிய நேசர்களுக்கு முன் வைத்து, சிறந்த மஞ்சத்தில் உட்கார்ந்திருக்கிறாள் எருசலேம். ஆராதனைக்குரிய பொருட்களே அற்ப சுகபோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது இங்கே. கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்ட வாழ்வை வேறு எவருக்கோ செலவழிப்பது எத்தனை பெரிய இழப்பு என்று பாருங்கள். நமக்கும் நம் நேரம், பொருள் யாருக்காக செலவாகிறது என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.
