எசேக்கியேல் 33:5தப்புவித்தல்
அவன் எக்காளத்தின் சத்தத்தைக்கேட்டும், எச்சரிக்கையிருக்கவில்லை; அவனுடைய இரத்தப்பழி அவன்பேரிலே சுமரும்; எச்சரிக்கையாயிருக்கிறவனோ தன் ஜீவனைத் தப்புவித்துக்கொள்ளுவான்.
Ezekiel 33:5
தப்புவித்தல்
எச்சரிக்கை கேட்டும் காதைக் கொடுக்காதவன் தன் அழிவுக்குத் தானே காரணமாகிறான். ஆனால் அந்த சத்தத்தைக் கேட்டு உடனே கவனமாக இருப்பவனோ தன் ஜீவனைத் தப்புவித்துக்கொள்கிறான். எச்சரிக்கை என்பது ஒரு வாய்ப்பு, அதை பயன்படுத்துவதும் விடுவதும் அவனவன் கையில்தான். எத்தனை அன்பான எச்சரிக்கையானாலும் அதற்குச் செவிசாய்க்க வேண்டியது நாம்தானே.
