எசேக்கியேல் 46:9பண்டிகைநாள் நடைமுறை
தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல்வழியாய்ப் புறப்படவும், தெற்குவாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்குவாசல் வழியாய்ப் புறப்படவும்கடவன்; தான் பிரவேசித்த வாசல் வழியாய்த் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக.
Ezekiel 46:9
பண்டிகைநாள் நடைமுறை
பண்டிகைநாட்களில் பெருந்தொகையான ஜனங்கள் வருவார்கள், அப்போது குழப்பம் ஏற்படாமல் இருக்க வடக்கு வாசலால் வந்தவர் தெற்கு வாசலால் போகவேண்டும், தெற்கால் வந்தவர் வடக்கால் போகவேண்டும். வந்த வழியே திரும்பாமல் இருப்பது நடைமுறையான ஒழுங்கு காக்கும் வழி. தேவனுடைய வீட்டில் அமைதியும் ஒழுங்கும் காக்கப்படவேண்டும் என்பதே இதன் நோக்கம். கூட்டமாக கூடும் இடங்களில் இப்படிப்பட்ட ஒழுங்கு எத்தனை பயனுள்ளது.
