எஸ்றா 9:3கிழிந்த வஸ்திரம்
இந்த வர்த்தமானத்தை நான் கேட்டபொழுது, என் வஸ்திரத்தையும் என் சால்வையையும் நான் கிழித்து, என் தலையிலும் என் தாடியிலுமுள்ள மயிரைப் பிடுங்கித் திகைத்தவனாய் உட்கார்ந்திருந்தேன்.
Ezra 9:3
கிழிந்த வஸ்திரம்
இந்த செய்தி எஸ்றாவின் காதில் விழுந்தவுடன் அவர் செய்தது என்ன தெரியுமா? தன் ஆடையையும் மேலாடையையும் கிழித்து, தலை மயிரையும் தாடியையும் பிடுங்கி, திகைப்புடன் அமர்ந்துவிட்டார். இது வெறும் சடங்கு அல்ல, உள்ளத்தில் இருந்த ஆழமான துக்கத்தின் வெளிப்பாடு. தேவனுடைய மக்கள் இப்படி வழி தவறியது அவருக்கு தன் சொந்த பாவம் போலவே வேதனை தந்தது.
