கலாத்தியர் 1:10மனுஷரையா தேவனையா
இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
Galatians 1:10
மனுஷரையா தேவனையா
பவுல் தன் மீது வந்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்கிறார் போலும் - அவர் மனிதரை பிரியப்படுத்த போதிக்கவில்லை என்று. மனிதரை பிரியப்படுத்த விரும்பியிருந்தால், கடினமான உண்மையை போதிக்காமல் இருந்திருப்பார். ஆனால் தேவனை பிரியப்படுத்துவதே அவரது நோக்கமாக இருந்ததால், மக்களுக்கு பிடிக்காத உண்மையை கூட தைரியமாக சொன்னார். கிறிஸ்துவின் ஊழியக்காரனாக இருப்பதற்கும், மனிதரை பிரியப்படுத்துவதற்கும் இடையே தெரிவு செய்ய வேண்டிய நேரங்கள் நமக்கும் வரும்.
