ஆதியாகமம் 18:32பத்து பேருக்கு
அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள் நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
Genesis 18:32
பத்து பேருக்கு
கடைசியாக ஆபிரகாம் ஒருமுறை மாத்திரம் இன்னும் பேசுகிறேன் என்று சொல்லி, பத்து நீதிமான்கள் இருந்தாலோ என்று கேட்கிறார். கர்த்தர் அதற்கும் இணங்குகிறார். இந்த மன்றாட்டம் இங்கே முடிவடைகிறது, ஆனால் சோதோமில் பத்து நீதிமான்கள் கூட இல்லை என்பதே அதன் அழிவின் அளவை காட்டுகிறது.
