ஆதியாகமம் 18:9சாராள் எங்கே
அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.
Genesis 18:9
சாராள் எங்கே
விருந்தினர் “உன் மனைவி சாராள் எங்கே” என்று கேட்டதிலேயே அவர்கள் ஆபிரகாம் குடும்பத்தை நன்கு அறிந்திருந்தார்கள் என்பது தெரிகிறது. கூடாரத்தில் இருக்கிறாள் என்று ஆபிரகாம் பதில் சொல்கிறார். இந்த கேள்வியிலேயே அடுத்து வரும் மகத்தான செய்திக்கான தொடக்கம் இருக்கிறது.
