ஆதியாகமம் 19:2வீட்டிற்கு அழைப்பு
ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.
Genesis 19:2
வீட்டிற்கு அழைப்பு
லோத்து தூதர்களை தன் வீட்டிற்கு அழைத்தார், தெருவில் இராத்தங்க வேண்டாம் என்று வருந்திக் கேட்டார். ஏன் இப்படி பிடிவாதமாக அழைத்தார் என்று பார்த்தால், அந்த ஊரின் கொடுமையை அவர் நன்றாக அறிந்திருந்தார். வழிப்போக்கர்களுக்கு தெருவில் என்ன நடக்கும் என்பதை அவர் யூகித்திருந்தார். அன்பான கவலையோடு விருந்தினரைக் காப்பாற்ற விரும்பும் மனது இதில் தெரிகிறது.
