ஆதியாகமம் 24:6திரும்பிச் செல்லக் கூடாது
அதற்கு ஆபிரகாம்: நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
Genesis 24:6
திரும்பிச் செல்லக் கூடாது
ஆபிரகாம் உடனே தெளிவாகச் சொன்னார் - ஈசாக்கை மறுபடியும் அந்த தேசத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று. கர்த்தர் ஆபிரகாமை அந்த தேசத்திலிருந்து அழைத்து, இந்த புதிய தேசத்திற்கு கொண்டு வந்தது ஒரு நோக்கத்துடன். அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால், ஈசாக்கு பின்னோக்கிச் செல்லக்கூடாது. முன்னோக்கிச் செல்வதே தேவனுடைய வழிமுறையாக இருந்தது.
