ஆதியாகமம் 34:19தாமதமின்றி செயல்படுதல்
அந்த வாலிபன் யாக்கோபுடைய குமாரத்தியின்மேல் பிரியம் வைத்திருந்தபடியால், அந்தக் காரியத்தைச் செய்ய அவன் தாமதம்பண்ணவில்லை. அவன் தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாயிருந்தான்.
Genesis 34:19
தாமதமின்றி செயல்படுதல்
தன் தகப்பன் வீட்டாரிலெல்லாம் மேன்மையுடையவனாக இருந்த சீகேம், தீனாள்மேல் கொண்ட பிரியத்தால் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள தாமதம் செய்யவில்லை. அவனுடைய ஆவல் அவனை உடனடியாக செயல்பட வைத்தது. ஆனால் இந்த ஆவல் அவனுக்கு என்ன விளையும் என்பதை அவன் அறியவில்லை.
