ஆதியாகமம் 35:6லூசுக்கு வந்தார்கள்
யாக்கோபும் அவனோடேகூட இருந்த எல்லா ஜனங்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லூசுக்கு வந்தார்கள்.
Genesis 35:6
லூசுக்கு வந்தார்கள்
யாக்கோபும் அவரோடிருந்த ஜனங்களும் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் ஸ்தலத்திற்கு வந்தார்கள் - இதே ஸ்தலத்திற்குத்தான் பெத்தேல் என்ற பேர் முன்பே அவர் கொடுத்திருந்தார். பயணம் முடிந்தது, நோக்கம் நிறைவேறியது. வெகு காலத்திற்கு முன் தன் கனவில் கண்ட ஸ்தலத்திற்கு இப்போது தன் மனைவிகள், பிள்ளைகள், மந்தைகளுடன் திரும்பி வந்திருக்கிறார். தேவனுடைய வாக்குத்தத்தம் நிறைவேறும் அந்த நாள் அவருக்கு எத்தனை நிறைவாக இருந்திருக்கும்.
