ஆதியாகமம் 40:6கலங்கிய முகங்கள்
காலமே யோசேப்பு அவர்களிடத்தில் போய், அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கலங்கியிருந்தார்கள்.
Genesis 40:6
கலங்கிய முகங்கள்
காலையில் யோசேப்பு தன் வேலையின்படி அவர்களைப் பார்க்கச் சென்றபோது, அவர்களது முகங்களில் ஏதோ கவலை தெரிந்தது. சொப்பனங்கள் அவர்களை உள்ளூர அலைக்கழித்திருந்தன. அன்னிய தேசத்தில், அர்த்தம் விளக்குவார் எவரும் இல்லாத நிலையில், அவர்களது மனது கலக்கமாக இருந்தது இயற்கையானதே.
