ஆபகூக் 1:4நியாயம் புரட்டப்படுதல்
ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்கிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.
Habakkuk 1:4
நியாயம் புரட்டப்படுதல்
நியாயப்பிரமாணம் இருந்தும் அது பலனற்றதாகிவிட்டதாம் - சட்டம் இருந்தும் அதைக் காக்க யாரும் இல்லை. துன்மார்க்கன் நீதிமானை வளைத்துக்கொள்கிறான் என்று ஆபகூக் சொல்கிறார், அதாவது வலிமையுள்ளவன் நல்லவனை நசுக்குகிறான். இது யூதா தேசத்தின் அக்கால நிலைமை - அரசாங்கமும் நீதிமன்றமும் இருந்தும் நேர்மை அற்றுப்போன காலம். இதைப் படிக்கும்போது நமது இன்றைய உலகும் இதற்கு அந்நியமானது இல்லை என்பது தெரியும்.
