ஆபகூக் 2:11சுவரும் உத்திரமும் சாட்சி
கல்லு சுவரிலிருந்து கூப்பிடும், உத்திரம் மச்சிலிருந்து சாட்சியிடும்.
Habakkuk 2:11
சுவரும் உத்திரமும் சாட்சி
கொடுமையினால் கட்டப்பட்ட வீட்டின் சுவர்கல்லுகளும், மேல் உத்திரங்களும் கூப்பிட்டு சாட்சி சொல்லும் என்கிறது இந்த வசனம். ரத்தப்பழிகளால் கட்டப்பட்ட ஒவ்வொரு கல்லும் அதை மறைக்க முடியாது, அது தானே பேசும். எவ்வளவு அழகாய் கட்டிடம் கட்டினாலும், அதன் அஸ்திவாரத்தில் இருக்கும் அநீதி ஒளிந்திருக்காது. கர்த்தருடைய கண்களுக்கு இருந்த மறைவு எதுவும் ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும்.
