ஆபகூக் 2:15நான்காம் ஐயோ - வெறிப்பட்டவன்
தன் தோழருக்குக் குடிக்கக்கொடுத்துத் தன் துருத்தியை அவர்களண்டையிலே வைத்து, அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படிக்கு, அவர்களை வெறிக்கப்பண்ணுகிறவனுக்கு ஐயோ.
Habakkuk 2:15
நான்காம் ஐயோ - வெறிப்பட்டவன்
தன் தோழரை குடிக்கச் செய்து, அவர்கள் நிர்வாணத்தை பார்த்து சிரிக்கும் கொடுமையான செயலை பாபிலோனுக்கு உவமையாய் சொல்கிறார் ஆபகூக். மற்ற ஜாதிகளை மயக்கி, அவரிடம் இருந்ததை பறித்து, அவர்களை அவமானப்படுத்தும் பாபிலோனின் அரசியல் இது. மற்றவரின் பலவீனத்தை பயன்படுத்தி தன் ஆதாயம் தேடுவது எப்போதும் ஐயோவைத்தான் அழைத்துவரும். மற்றவரை மதிக்காமல் நடத்துவது கர்த்தருடைய கண்களுக்கு எப்போதும் தெரியும்.
