ஆகாய் 1:2இன்னும் காலம் வரவில்லை
இந்த ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Haggai 1:2
இன்னும் காலம் வரவில்லை
ஜனங்கள் சொன்ன சாக்கு இதுதான் - ஆலயம் கட்ட இன்னும் நேரம் வரவில்லை என்று. பதினாறு வருஷம் ஆகியும் இன்னும் காலம் வரவில்லை என்று சொல்வது எத்தனை வேடிக்கையாக இருக்கிறது பாருங்கள். நம் வாழ்விலும் இப்படித்தான், கடவுளுக்கான காரியங்களை தள்ளிப்போட நமக்கு எப்போதும் ஒரு சாக்கு இருக்கும். கர்த்தர் இதை மிகத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறார், ஏனெனில் தள்ளிப்போடுதலின் உண்மையான முகத்தை அவர் தெரிந்திருந்தார்.
