எபிரெயர் 3:2உண்மையான ஊழியர்
மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார்.
Hebrews 3:2
உண்மையான ஊழியர்
மோசே தேவனுடைய வீட்டில், அதாவது இஸ்ரவேல் ஜனத்தின் நடுவே, தன் பணியில் மிகவும் உண்மையாக நடந்தவர். ஆனால் இயேசுவும் அதே உண்மையோடு தம்மை ஏற்படுத்தின பிதாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். இரண்டு பேரும் நம்பிக்கைக்குரியவர்கள் என்று வைத்து ஒப்பிடுகிறார் ஆசிரியர், ஆனால் அடுத்த வசனங்களில் வேறுபாட்டைக் காட்டப் போகிறார். நம் விசுவாசத்திற்கு அஸ்திபாரமாக இருப்பவர் உண்மையுள்ளவர் என்பதே நமக்குப் பெரிய பாதுகாப்பு.
