எபிரெயர் 8:5நிழலும் மாதிரியும்
இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணுகையில் மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிருங்கள் என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.
Hebrews 8:5
நிழலும் மாதிரியும்
பூமியிலுள்ள ஆசாரியர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலும் நிழலும் மட்டுமே. மோசே கூடாரத்தை உண்டாக்கும்போது தேவன் மலையிலே அவனுக்குக் காண்பித்த மாதிரியின்படியே எல்லாவற்றையும் செய்யும்படி எச்சரித்தார். அதாவது பூமியிலுள்ள கூடாரம் ஒரு நிழல்படம், மெய்யானது பரலோகத்தில் இருக்கிறது. நிழலைப் பார்த்து மகிழ்ந்திருந்தவர்கள் இப்போது மெய்யானதைக் கண்டு கொள்ள வேண்டும்.
