ஓசியா 13:1பேசினால் நடுங்கும் பேர்
எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகால் விஷயத்தில் குற்றஞ்செய்து மடிந்துபோனான்.
Hosea 13:1
பேசினால் நடுங்கும் பேர்
ஒரு காலத்தில் எப்பிராயீம் கோத்திரம் பேசினால் மற்ற கோத்திரங்கள் நடுங்கும், அப்படி மேன்மை பெற்றிருந்தது. ஆனால் அந்த மேன்மையெல்லாம் எங்கே போனது? பாகால் விக்கிரகத்தை வணங்கி, தன் தேவனை விட்டு விலகி, தன் மேன்மையையே தான் கொன்றுபோட்டான். மேன்மை நிலைத்திருக்க வேண்டுமானால் அது தேவனிடத்தில் வேரூன்றியிருக்க வேண்டும், அல்லாவிட்டால் அது சரிந்துவிடும்.
