ஓசியா 8:6தட்டானின் கை வேலை
அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; தட்டான் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாய்ப் போகும்.
Hosea 8:6
தட்டானின் கை வேலை
அந்த கன்றுக்குட்டியை ஒரு தட்டான் தன் கைகளால் செய்தான், அது தேவனாக இருக்க முடியாது. மனுஷன் செய்த ஒரு பொருள் எப்படி தேவனாக இருக்க முடியும் என்பது கர்த்தருடைய கருத்து. ஆகவே அது நிரந்தரமாக இருக்கவே முடியாது, துண்டுதுண்டாய் உடைந்துபோகும். நமது கைகளால் செய்யப்பட்ட எதுவும், அது எவ்வளவு அலங்காரமாக இருந்தாலும், தேவனுடைய இடத்தை எடுக்க முடியாது.
