ஏசாயா 1:23கைக்கூலி நாடுவோர்
உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள்; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.
Isaiah 1:23
கைக்கூலி நாடுவோர்
பிரபுக்கள் என்று சொல்லப்படுபவர்கள் திருடரின் தோழர்களாக மாறினார்கள், பரிதானத்தை விரும்பி கைக்கூலியை நாடித்திரிந்தார்கள். திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரிக்காமலும் விதவையின் வழக்கை கேட்காமலும் இருந்தார்கள். சமூகத்தில் நீதி வழங்க வேண்டியவர்களே அநீதிக்கு வித்திடுபவர்களானார்கள். அதிகாரம் இருக்கும் இடத்தில் நேர்மை இல்லாமல் போனால் பலவீனமானவர்கள் தான் அதிக பாதிப்பு அடைவார்கள்.
