ஏசாயா 39:4எல்லாம் காண்பித்தேன்
அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா என் வீட்டிலுள்ளதெல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.
Isaiah 39:4
எல்லாம் காண்பித்தேன்
ஏசாயா மேலும் கேட்டார் - உம் வீட்டில் என்ன பார்த்தார்கள்? எசேக்கியா பெருமையுடன் சொன்னார், என் வீட்டிலுள்ளதெல்லாவற்றையும் பார்த்தார்கள், மறைக்காமல் காண்பித்தேன் என்று. இந்த மறுமொழியில் ஒளிந்திருக்கும் ஆபத்தை ராஜா உணரவில்லை - தன் பொக்கிஷத்தை பகைவனாய் மாறக்கூடிய தேசத்திற்குக் காண்பித்துவிட்டார். நம்பிக்கை வைக்கவேண்டியவரை நம்பாமல், நம்பக்கூடாதவரை நம்பும் தவறு இங்கு நிகழ்ந்திருக்கிறது.
