ஏசாயா 40:15துளியும் தூசியும்
இதோ, ஜாதிகள் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும், தராசிலே படியும் தூசிபோலவும், எண்ணப்படுகிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார்.
Isaiah 40:15
துளியும் தூசியும்
பெரிய பெரிய ஜாதிகள், சாம்ராஜ்யங்கள் எல்லாம் தேவனுக்கு முன்பாக ஏற்றச்சாலில் தொங்கும் ஒரு துளி மட்டுமே, தராசிலே படியும் தூசு மட்டுமே என்கிறது. தீவுகளையே ஒரு அணுவைப்போல தூக்கும் வல்லமை அவருக்கு உண்டு. பாபிலோன் போன்ற வல்லரசுகளுக்கு பயந்திருந்த இஸ்ரவேலருக்கு இது ஒரு பெரிய ஆறுதல் - அவை தேவனுக்கு முன் ஒன்றுமே இல்லை.
