ஏசாயா 43:18பழையவை மறவுங்கள்
முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம்.
Isaiah 43:18
பழையவை மறவுங்கள்
முந்தினவைகளை - அதாவது செங்கடல் அற்புதத்தை கூட - இப்போது நினைக்கவேண்டாம் என்கிறார் கர்த்தர். ஏன் என்றால் அவரிடம் இன்னும் பெரிய, புதிய காரியம் காத்திருக்கிறது. கடந்த காலத்தின் அற்புதங்களை மறக்கவேண்டாம் என்று அல்ல, அவற்றின் மேலே இப்போது நடக்கும் புதிய செயலை பார்க்க வேண்டும் என்பதே.
