ஏசாயா 46:1விழுந்த தேவர்கள்
பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் விக்கிரகங்கள் காட்டுமிருகங்களுக்கும் நாட்டுமிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள் இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும்.
Isaiah 46:1
விழுந்த தேவர்கள்
பேலும் நேபோவும் பாபிலோனின் பெரிய தேவர்கள் - கல்தேயர் மிகவும் மதித்து வணங்கியவை. ஆனால் பாருங்கள், அந்த நகரம் வீழும்போது அவற்றின் விக்கிரகங்களை மனுஷர் மிருகங்கள்மேல் ஏற்றி ஓட்டிக்கொண்டு ஓடவேண்டியதாயிற்று. தேவனாகச் சொல்லப்பட்டவைகளே சுமையாகி, தாங்கவேண்டியவைகளாகப் போயின. இது எசாயா காட்டும் கடும் நகைச்சுவை - தாங்குகிறவர் தேவனா, தாங்கப்படுகிறவர் தேவனா என்று கேட்கிறார்.
