ஏசாயா 49:22தோளின்மேல் சுமந்து
இதோ, ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் குமாரரைக் கொடுங்கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் குமாரத்திகள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Isaiah 49:22
தோளின்மேல் சுமந்து
ஜாதிகளுக்கு நேராக கரத்தை உயர்த்தி, குமாரரையும் குமாரத்திகளையும் தோள்களில் தூக்கிக்கொண்டு வருவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார். சிதறிப்போன மக்களை மீண்டும் தாய் தேசத்திற்கு கொண்டு வருவதற்கு உலக ஜாதிகளே கருவியாக பயன்படுத்தப்படுவார்கள். தேவனுடைய கரம் எத்தனை தூரம் நீட்டப்படும் என்பதை இது காட்டுகிறது. நம் மீட்பு எங்கிருந்தாலும் வரும் என்ற உறுதி இதில் இருக்கிறது.
